ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? விளாசும் சீமான்!

5ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து பாடம் இடம்பெற்றுள்ளதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் பொது அறிவுக்கான ‘Rags to Riches Story’ பாடத்தில், நடிகர் ரஜினிகாந்த் வறுமையில் வாடி பின் உழைப்பால் உயர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பாடத்தில் சார்லி சாப்ளின், ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகியோருடன் ரஜினிகாந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கார்பெண்டரில் இருந்து பேருந்து நடத்துனராகி, பின்னர் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல், ஒரு கலாச்சார Icon ஆக திகழ்கிறார் என்று ரஜினிகாந்த் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுதொடர்பாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘நாட்டில் அவர் மட்டும் தான் உழைப்பால் உயர்ந்திருக்கிறாரா? சுந்தர் பிச்சை போன்று முன் மாதிரியாக கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் சுய உழைப்பில் முன்னேறியிருக்கிறார்கள்.

அப்படியிருக்கையில் திரைத்துறையில் நடித்து சாதனை செய்துள்ளார் என்று ரஜினிகாந்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஒருவேளை கலைத்துறை என்று எடுத்துக்கொண்டால் கமல்ஹாசனை இடம்பெற செய்திருக்கலாம். அவர் தான் 5 வயதில் இருந்து நடித்துக்கொண்டிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook