நிறைவேற்று அதிகாரங்கள் இப்போதும் மைத்திரியிடம்!

நாட்டில் இன்னும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே உள்ளார் என டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

நாட்டில் இன்னும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே உள்ளார். அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய அளவான நிறைவேற்று அதிகாரங்களை அவரிடமே உள்ளது.

19 ஆவது அரசியலமைப்பினூடாகவும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை.

இதேவேளை, நாட்டின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றம் கொண்டுவரப்படுவதும் அவசியம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook