2020ம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாற்றம்! விண்ணப்பம் கோரல்!

2020ம் ஆண்டிற்கான மத்திய மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் சேவை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் மத்திய மாகாண கல்வித்திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.

வலயத்தினூடாகவும் மற்றும் வெளி மாகாண விண்ணப்பங்கள் www.centralprovinceedu.lk இணையதள முகவரியினூடாகவும் எதிர்வரும் 2019 ஜூலை 15ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இணையத்தளத்தினூடாக முன்வைக்க வேண்டும் எனவும் திணக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வெளிமாகாண மற்றும் தேசிய பாடசாலை விண்ணப்பங்கள் 2019 ஜூலை 15ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கும் வகையில் அதிபர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வலயங்களுக்கிடையேயான இடமாற்றம் மற்றும் வெளி மாகாண இடமாற்றம் போன்றவைக்கு www.centralprovinceedu.lk இணையத்தளத்தினூடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண கல்வித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook