வட்ஸ் அப்பில் அடிப்படைவாதம் – மூன்று இளைஞர்கள் கைது

தர்கா டவுன் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் 100 உறுப்பினர்கள் இடையிலான அடிப்படைவாத வட்ஸ் அப் வலையமைப்பை நடத்தி வந்த பிரதான சந்தேக நபருடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த வட்ஸ் அப் வலையமைப்பில் இருந்த 25 பேர் உடனடியாக இன்று அதில் இருந்து வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வட்ஸ் அப் வலையமைப்பு சுமார் 3 ஆண்டுகளாக இயங்கி வந்துள்ளது. பிரதான நபர் 23 வயதானவர் எனவும் இவர் அளுத்கமை தர்கா நகரில் லோட்டஸ் வீதியில் வசித்து வருபவர் எனவும் வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு இலங்கை திரும்பியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ஏனைய இரண்டு சந்தேக நபர்களிடம் இது குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் தர்கா நகர் மத்துகமை வீதி மற்றும் லோட்டஸ் வீதி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook