பேரிடர் கால உதவிக்காக உருவாக்கப்பட்டது நாய் ரோபோ!

ஹை க்யூ ரியல் என்ற பெயரில் நாய் போன்று செயலாற்றக் கூடிய ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தாலிய தொழில்நுட்பக் கழகத்தினால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயற்கைப் பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த ரோபோவின் இழுவைத் திறனைச் சோதிக்க விரும்பிய விஞ்ஞானிகள் விமானம் ஒன்றை இழுக்க வைக்க முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து இதன் கால் பகுதிக்கு வழுக்காமல் இருக்க சிறப்பு ரப்பர் பொருள் பொருத்தப்பட்டது. இதையடுத்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட சிறிய ரக விமானத்தை ஹை கியூ ரியல் இழுத்துச் சென்றது.

வெறும் 127 கிலோ எடை கொண்ட அந்த ரோபோ விமானத்தை 30 அடி தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து குறிப்பிட்ட ரோபோவை செயல்பாட்டுக்கு கொண்டவர இருப்பதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook