பலத்தப் பாதுகாப்பிற்கு மத்தியில் பிரான்ஸில் வாக்குப்பதிவு!

ஐரோப்பிய தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பிரான்சில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 08:00 மணி முதல் அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் திறக்கப்பட்டன.

பிரான்ஸ் முழுவதும் மொத்தமாக 10,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரான்சில் மொத்தமாக 47 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இரவு 8 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் எத்துவா பிலிப் வாக்குச்சாவடி திறந்த சில நிமிடங்களிலேயே Le Havre (Seine-Maritime) இல் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, லியோனில் நேற்று முந்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்திருந்ததை தொடர்ந்து, அங்குள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook