சீமானை வாழ்த்த சென்றவருக்கு காத்திருந்த இன்பதிரச்சி: என்ன செய்தார் தெரியுமா

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை வாழ்த்த வீட்டிற்கு சென்ற நபருக்கு அவர் இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 3.87 சதவீத வாக்குகளை பெற்றது.

இந்நிலையில், இயக்குநரும், பத்திரிகையாளருமான இரா.சரவணன் என்பவர், சீமானின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது சீமான், இளநீரில் நுங்கு சுளைகளைப் போட்டு தித்திப்பு பானம் ஒன்றை அவருக்கு கொடுத்துள்ளார்.

மேலும், சராவணனுடன் உரையாடிய சீமான், நுங்கு பாயாசம், நுங்கு சர்பத், நுங்கு பால் என தயாரித்து விற்றால் டாஸ்மாக் லாபத்தைவிட மிகுதியான லாபத்தை ஈட்ட முடியும் என தனது திட்டத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook