வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்! அமைச்சர் கோரிக்கை

அமைதியின்மையைத் தோற்றுவித்த சகலருக்கும் எதிராக பாரபட்சமின்றி தண்டனை வழங்குமாறு, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த விடயம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று மினுவாங்கொட பிரதேசத்துக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர். “நாட்டின் பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் குழந்தைகளை ஈடுபடுத்தாதீர்கள்.

இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம். கறுப்பு ஜூலையைப் போல், மீண்டும் ஒரு சம்பவம் இந்த நாட்டில் ஏற்படக் கூடாது. வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

நாம் அனைவரும் ஒ​ரே இனமாக வாழ வேண்டும். அதற்கு ஏற்றால் போல் இந்த நாட்டை கட்டியெழுப்பும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook