கணவனை கல்லால் அடித்துக் கொன்ற காதல் மனைவி – திருமணம் முடிந்த ஓரிரு நாளில் கசந்த காதல்…

காதல் கணவனை, மனைவியே கல்லால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தலைச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமனின் மகன் சதீஷ்குமார்.

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய இவர், அப்பராசபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் கலைமதியை காதலித்து கரம்பிடித்தார். 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

ஆனால், திருமணம் முடிந்த ஓரிரு நாட்களில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து கணவன் சதீஷ்குமார் மீது மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில், கலைமதி புகாரளித்தார்.

அண்மையில் நடந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் வரும்படி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனிடையே, உறவினர் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமாருக்கும் எதிரே வந்த மனைவி கலைமதி மற்றும் அவரது தந்தை நாகராஜ் ஆகியோருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தின் போது, காதல் மனைவி கலைமதி, சதீஷ்குமாரின் தலையில் கல்லால் அடித்துள்ளார். இதில், நிலைகுலைந்த சதீஷ்குமாரின் தொடையில், கலைமதியின் தந்தை நாகராஜ் கத்தியால் குத்தி திருகியதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்த சதீஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலன்றி அவர் உயிரிழந்தார். சதீஷ்குமாரின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழும் காட்சி நெஞ்சை பிசைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook