யாழ் மக்களே ஒரே ஒரு தடவை படியுங்கள்…உங்கள் செயலால் பல உயிர்களை காப்பாற்றலாம்

உலகில் எத்தனை லட்சம் மனிதர்கள் ஒரு வேளையேனும் உணவு உண்பதற்கு தவித்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா என்பது உண்மையாகும்.ஒவ்வொரு வருடமும் 1.3 பில்லியன் டன்கள் உணவுப் பொருட்களை நாம் வீணாக்குகிறோம்.

ஆனால், உலகின் 7 மனிதர்களில் ஒருவர் பட்டினியாக படுக்கைக்குச் செல்கிறார். 5 வயதிற்குட்ப்பட்ட 20,000ற்கும் அதிகமான குழந்தைகள் தினமும் பசியால் மடிகின்றனர்.எனவே எமது தேசத்தில் நாம் சமைக்கும் உணவுகளை வீணாக்காமல் அனைவருக்கும் பகிர்ந்து உண்பதே சிறந்ததாகும்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு அன்பர் உணவுகள் வீணாகாமல் இருப்பதற்கும் உண்ண உணவின்றி தவிக்கும் உங்கள் உறவுகளுக்கும் தேடிச் சென்று உணவளித்து வருகின்றார்.

யாழ் இணுவில் பிரதேசத்தில் வசிக்கும் அன்பர் ஒருவர் எமது மண்ணில் நடைபெறும் நிகழ்வுகளில் வழங்கப்படும் உணவில் மீதமானவற்றை தாமே வந்து எடுத்துச் சென்று எமது தேசத்தில் இருக்கும் உண்பதற்கு நல்ல உணவின்றி துன்பப்படும் உயிர்களுக்கு நேரில் சென்று உணவளித்து வருகின்றார்.

மக்கள் சேவையே மகேசன் சேவையென கருதி செயற்படும் இந்த அன்பர் தமது உணவளிக்கும் சேவையை முற்றிலும் இலவசமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த நற்பணியைச் செய்து வருகின்றார்.

மேலும் நீங்களும் இந்த புனிதமான பணியில் இணைந்து கொள்ள விரும்பினால் குறித்த அன்பரிடம் தொடர்பு கொண்டு உங்கள் வீடுகள், பொது இடங்களில் நடைபெறும் விருந்துகளில் மீதமாகப் போகும், உணவை சிறந்த முறையில் உண்ண உணவின்றி தவிக்கும் ஏழைகள், அநாதைச் சிறுவர்கள், ஆதரவற்றோருக்கு வழங்குவதன் மூலம் நீங்களும் இந்த புண்ணிய செயலில் ஈடுபடுங்கள்.

இணுவில் மண்ணிலிருந்து ”சிவருசி உணவு சேவை” எனும் பெயரில் செயற்படும் குறித்த இலவச உணவு வழங்கும் சேவைக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.நீங்கள் உண்ணும் உணவின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு வழங்குவதன் மூலம் இறைவனின் ஆசிர்வாதத்திற்கு உள்ளாகுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook