உயிருக்கு போராடும் 2 குழந்தைகளின் தாயை காப்பாற்ற உதவுங்கள்..

இரண்டு சிறு பிள்ளைகளது தாயாரின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிருக்காகப் போராடி வருகின்றார். அ

வர் தனது இரண்டு சிறு பிள்ளைகளது எதிர்காலம் கருதி, தனது உயிர் காக்கும் சிகிச்சைக்கு உதவுமாறு நல்லுள்ளங்கொண்ட பரோபகாரிகளிடமிருந்து உதவியை எதிர்பார்த்துக் கோரியுள்ளார்.

கிளிநொச்சி ஜெயந்திநகரில் வசிக்கும் சந்திரசிறி சுபாசினி என்னும் 38 வயதுடைய, இரண்டு சிறு பிள்ளைகளின் தாயாரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் 

யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிருக்காகப் போராடி வருகின்றார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், 

இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு முப்பது இலட்சம் (3000000) ரூபா பணம் தேவைப்படுவதாக வைத்தியர்களால் கூறப்பட்டுள்ளது. 

இவரது கணவரும் அன்றாட கூலித் தொழிலாளியாகக் காணப்படுகின்றார். மற்றும் ஏற்கனவே முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற கொடிய யுத்தத்தாலும் 

இடம் பெயர்ந்து எல்லாற்றையும் இழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
இந்நிலையில் இவரது சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைக்கு வேண்டிய முப்பது இலட்சம் ரூபா பணத்தைத் 

திரட்ட முடியாத நிலையில் அல்லலுற்று உயிருக்காகப் போராடும் இத்தாய், நல்லுள்ளங்கொண்ட பரோபகாரிகள் தமக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் தனது சத்திரசிகிச்சைக்கு உதவி, 

தனது உயிர் காக்க உதவுமாறு மிகவும் எதிர்பார்ப்புடன் உதவி கோரிக் காத்திருக்கின்றார்.
இவர் தொடர்பான முழுமையான தகவல்களைப் பெற்று இவருக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள், 

இவரது தொலைபேசி இலக்கமான 0094771325372 மற்றும் 0094778302471 எனும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உதவ முடியும்.

இவர் தொடர்பான மேலதிக விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது தொலைபேசி இலக்கமான 0094776913244 எனும் இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவ விரும்பும் நல்லுள்ளங்கள் சந்திரசிறி சுபாசினி, இலங்கை வங்கிக் கணக்கு இல. 71331260 எனும் வங்கி இலக்கத்தின் மூலம் உதவ முடியும்.

இவர் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கடங்கிய ஆவணங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
யுத்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உதவியற்ற நிலையில் 

தனது சிறுநீரக சத்திர சிகிச்சை மூலம் உயிர் காக்க உதவி கோரியுள்ள இவருக்கு இவரது இரு சிறு பிள்ளைகளையும் கருத்திற்கொண்டு விரைந்து உதவி புரிவோம் நல்லுள்ளங்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook