பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஆரம்பம் – சுதந்திர கட்சியின் திடீர் முடிவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தற்சமயம் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் ஜனாதிபதி உத்தியோக பூர்வ இல்லத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இதனடிப்படையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook