மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்த பவ்ரல் அமைப்பு கோரிக்கை

மாகான சபைகளுக்கான தேர்தல் விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிவடைந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பணத்துக்காக கொள்கைகளை மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் காலங்களில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் உள்ளூராட்சி சபைகளை இணைந்து நிறுவுவதில் இணக்கத்தை காட்ட மறுத்துள்ளன முக்கியமாக கட்சிகள் பணத்துக்காக தனது கொள்கைகளை மாற்றக் கூடிய சூழ் நிலை எழுந்துள்ளது மில்லியன் கணக்கான தொகை பணம் இதற்கென செலவிடப்பட்டுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×

Like us on Facebook